• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை தமிழக அரசு பறிகொடுத்துள்ளது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை தமிழக அரசு பறிகொடுத்துள்ளது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசும் கேரள அரசும் கைகோர்த்து உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத்தந்த தீர்ப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.

  • Share this:
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்காமல்  தமிழக அரசு கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்தும், தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா அரசு மற்றும் கேரளா அரசுக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், ’முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகம் தண்ணீர் பெறும் உரிமை 999 வருடங்களுக்கு பெறப்பட்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து அணை குறித்து தவறான தகவல்களை கேரளா அரசு பரப்பிவருகிறது. கேரளா அரசு முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று ஜெயலலிதா பல கோடி செலவு செய்து அணையை புதுப்பொலிவுடன் பராமரிப்பு செய்தார்.

152 அடி நீரைத் தேக்க கேரளா அரசுக்கு ஜெயலலிதா பலமுறை கோரிக்கை வைத்தார். கேரளா அரசு ஒத்துழைப்பு வழங்காததால் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து வல்லுனர்கள் ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என ஒப்புதல் அளித்தார்கள்.

2006 ல் ஆட்சிக்கு வந்த திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை துரிதப்படுத்தவில்லை. 2006 ல் கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக துணை போனது. 2011 ல்  மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தை நாடினார், உச்ச நீதிமன்றத்தால் ஆய்வு செய்த வல்லுனர் குழு பூகம்பம் வந்தால் கூட அணைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என கூறியது.

142 அடி நீரை தேக்கி கொள்ளலாம் என்ற வரலாற்றுத் சிறப்புமிக்கத்  தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்தார். பேபி அணை, சிற்றணை பழுது பார்க்க ஜெயலலிதா 6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். பேபி அணை, சிற்றணை பழுது பார்க்க கேரளா அரசு அனுமதி தரவில்லை. தீர்ப்பு வந்த ஆண்டே 142 அடி நீர் தேக்கப்பட்டது. அணையின் முழு அதிகாரம் தமிழ்நாட்டுக்கே உள்ளது. ஜெயலலிதா பெற்று தந்துள்ள தீர்ப்புக்கு இப்போது குந்தகம் செய்து உள்ளனர்.

கேரளாவுக்கு தண்ணீர் திறந்ததில் துரைமுருகன் சப்பை கட்டு கட்டி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி 142 அடி நீர் தேக்க முடிந்தது? மக்களுக்கு இரு மாநில அரசுகளும் குந்தகம் விளைவித்து உள்ளது. படிப்படியாக தண்ணீரை குறைப்பதே இரு மாநில அரசுகளின் எண்ணம். தென் மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். தமிழக அரசு முல்லை பெரியாறு அணையின் உரிமையை நிலை நாட்டவில்லை. கேரளா அரசு பேபி அணையில் மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்ததாக செல்கிறார்கள். அது உண்மையா என தெரியவில்லை. ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை மீட்டெடுக்க அதிமுக என்றும் போராடும். ஜீவாரதர உரிமையை பெறும் வரை அதிமுக என்றும் ஒயாது’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: