புயலால் சேதமான போடி மெட்டு மலைச்சாலையை பார்வையிட்ட ஓ.பன்னீர் செல்வம்!

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

மாந்தோப்பு பகுதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.          

 • Share this:
  போடியில் புயலால் சேதமடைந்த மாங்காய் தோப்புகள் மற்றும் போடி மெட்டு மலைச்சாலையை முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.

  அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான டவ் - தே புயலால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.  இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி அருகே ஊத்தாங்கரை, பிச்சாங்கரை,  உலக்குருட்டி, வடக்கு மலை உள்ளிட்ட இடங்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் உதிர்ந்து சேதமடைந்தது.

  ஓ.பன்னீர் செல்வம்


  காசா லட்டு, காளப்பாடி, பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் பல டன் அளவில் இந்த புயலால் சேதமடைந்தது.  இந்நிலையில் புயலால் பாதிப்படைந்த மாந்தோப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம்  நேரில் சென்று பார்வையிட்டார். போடி பிச்சாங்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

  Read More:  நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்!

  இதையடுத்து  கொச்சின் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடி மெட்டு மலைச்சாலையில் மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த பகுதிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  தேனி செய்தியாளர் பழனிக்குமார்
  Published by:Arun
  First published: