7வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5வருட சிறை தண்டனை!

7வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5வருட சிறை தண்டனை!

தேனி

நாச்சிமுத்துவிற்கு 5 வருட கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000அபராதமும் அபராதத்தொகையை செலுத்தத்தவறினால் 1 வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.

 • Share this:
  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 7வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..     

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுருளிப்பட்டி சாலையில் வசித்து வருபவர் நாச்சிமுத்து (வயது 33). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கம்பம் தெற்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நாச்சிமுத்துவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

  வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நாச்சிமுத்துவிற்கு 5 வருட கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000அபராதமும் அபராதத்தொகையை செலுத்தத்தவறினால் 1 வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணமாக ரூ.1லட்சம் வழங்க உத்தரவிட்டார்.      இதையடுத்து நாச்சிமுத்துவை மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்கு தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

  தேனி செய்தியாளர் - பழனிகுமார்
  Published by:Arun
  First published: