ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆந்திரா டூ தேனி.. அரசுப்பேருந்தில் கடத்திவரப்பட்ட கஞ்சா - போலீஸில் சிக்கிய கஞ்சா வியாபாரி

ஆந்திரா டூ தேனி.. அரசுப்பேருந்தில் கடத்திவரப்பட்ட கஞ்சா - போலீஸில் சிக்கிய கஞ்சா வியாபாரி

கஞ்சா கடத்தலில் கைதான நபர்கள்

கஞ்சா கடத்தலில் கைதான நபர்கள்

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆந்திராவில் இருந்து தேனிக்கு அரசுப் பேருந்தில் 16 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் மற்றும் வியாபாரி கைது. 1.60லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை.

  ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம், அன்னஞ்சி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

  Also Read:  4 கல்யாணம்.. 60 லட்சம் சுருட்டல் - ஒரு கிராமத்தையே அலற விட்ட இளம்பெண்

  இந்நிலையில் தேனி – பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அல்லிநகரம் காவல்துறையினர், திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய வாலிபரை பின் தொடர்ந்தனர்.         அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரிடம் அரசுப் பேருந்தில் தான் மறைத்து கொண்டு வந்த 8கஞ்சா பொட்டலங்களை அவரிடம் கொடுத்த போது கையும், களவுமாக இருவரும் மாட்டிக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டியைச் சேர்ந்த அஜய்(20) என்ற வாலிபர், ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்து அதனை கம்பம் வியாபாரி குமரேசனிடம்(54) ஒப்படைத்தது தெரியவந்தது.         இதையடுத்து கடத்திவரப்பட்ட ரூபாய் 1.60லட்சம் மதிப்பிலான 16கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கரவாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

  Also Read:  வேலூர் அருகே 16 வயது சிறுமியுடன் 41 வயது ஆணுக்கு திருமணம்: பெண்ணின் தந்தை, புதுமாப்பிள்ளை கைது!

  மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்த அல்லிநகரம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.இதனிடையே இதே போன்று வேறொரு அரசுப் பேருந்தில் திருச்சியில் இருந்து தேனிக்கு மற்றொரு வாலிபர் கஞ்சா கடத்தி வருவதாக கைதான இருவரும் விசாரணையில் கூறியுள்ளார். அது தொடர்பாகவும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி அவரை பிடிப்பதற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  செய்தியாளர்: பழனிகுமார் ( தேனி)

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Andhra Pradesh, Cannabis, Crime | குற்றச் செய்திகள், Theni, Youth arrested