Home /News /tamil-nadu /

கள்ளக்காதலியின் கணவன் மீது டிராக்டர் ஏற்றிய இளைஞர்.. கொலைக்கான காரணம் என்ன?

கள்ளக்காதலியின் கணவன் மீது டிராக்டர் ஏற்றிய இளைஞர்.. கொலைக்கான காரணம் என்ன?

தேனி கொலை

தேனி கொலை

Illicit Relationship: கள்ளத் தொடர்பு விவகாரத்தால் ஒரு குடும்பமே சிதைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி அருகே கள்ளக் காதலியின் கணவனை டிராக்டர் ஏற்றி கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர். ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பின் தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று கம்பம் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதியது. அதில் நிலைகுலைந்த தங்க ரமேஷை  டிராக்டர் ஓட்டி வந்த நபர் கீழே இறங்கி வந்து  தான் வைத்திருந்த மரக்கட்டையால் சரமாரியாகக் கொலை வெறித்தாக்குதல் நடத்தினார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை வெறித் தாக்குதலை கண்ட அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    Also Read: போலீஸ் யூனிஃபார்மில் வசூல் வேட்டை.. ஆசைவார்த்தை கூறி லட்சங்கள் சுருட்டல் - போலி பெண் எஸ்.ஐ சிக்கியது எப்படி?

    மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுப் பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்து நாட்களாக சிகிச்சையில் இருந்த தங்க ரமேஷ் நேற்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

    இதனிடையே தங்கரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக காமய கவுண்டன் பட்டியைச் சேர்ந்த அசன் குமார் (வயது 28) என்ற நபர் சம்பவத்தன்று கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விவசாயக் கூலிகளான அசன்குமாரும், தங்க ரமேஷூம் நண்பர்களாவார்கள். இதில் தங்கரமேஷூக்கு திருமணமாகி ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    Also Read:  கிரில் சிக்கன்.. ஃபிரைட் ரைஸ்-க்கு கடன் சொன்ன இளைஞர்.. காசு கேட்டதால் கடையை நொறுக்கி ஆவேசம்

    இந்த நிலையில் அசன்குமாருக்கு  தங்கரமேஷின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு விவகாரம் தங்கரமேஷூக்கு தெரிந்ததால் அவரது மனைவி கடந்தாண்டு ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டார். அதனால் தங்கரமேஷூக்கும் - அசன்குமாருக்கும் இடையே கடந்த ஒரு வருடங்களாகவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தங்கரமேஷை, அசன்குமார் கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக முதலில் கொலை முயற்சி என வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர் தற்போது அதனை கொலை வழக்காக மாற்றி அசன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கள்ளத் தொடர்பு விவகாரத்தால் ஒரு குடும்பமே சிதைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: பழனிக்குமார் ( தேனி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Friends, Husband Wife, Illegal affair, Illegal relationship, Theni

    அடுத்த செய்தி