Home /News /tamil-nadu /

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. ஒருவருடமாக பயனாளிகளை அலைக்கழிப்பதாக புகார்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. ஒருவருடமாக பயனாளிகளை அலைக்கழிப்பதாக புகார்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் பொதுமக்கள் புகார்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் பொதுமக்கள் புகார்

Taliku Thangam : தாலிக்கு தங்கம் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் போதே ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆண்டிபட்டியில் தாலிக்கு தங்கம் வழங்கும்திட்டத்தில் பயனாளிகளை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 230 பேர் அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரையில் தாலிக்கு தங்கம் வழங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் பயனாளிகளுக்கு நேற்று (வியாழக்கிழமை) ஆண்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தாலிக்கு தங்கம் வழங்குவதாக அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதனையடுத்து பயனாளிகள் அதிகாரிகள் கூறிய திருமண மண்டபத்திற்கு வந்த போது அங்கு தனியார் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததை தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலையும் அதே திருமண மண்டபத்தின் முன்பாக 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் காத்திருந்தனர். ஆனால் மண்டபத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த பயனாளிகள் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Also Read: பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது வழக்குப்பதிவு

    மேலும் தாலிக்கு தங்கம் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் போதே ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகவும், தற்போது விழா நடத்துவதற்காக ஒவ்வொரு பயனாளிகளிடமும் தலா 1000 வாங்கியதாகவும் மக்கள் புகார் கூறினர்.

    Also Read: இரவோடு இரவாக காலியான நகைக்கடை - சதுரங்கவேட்டை பாணியில் கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி

    சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயனாளிகளுக்கு அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமான பதிலும் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    செய்தியாளர்: பழனிகுமார் (தேனி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Andipatti Constituency, Gold, Theni, Woman

    அடுத்த செய்தி