Home /News /tamil-nadu /

தென்னை நார் தொழிற்சாலையில் மீண்டும் தீ - 1500 டன் தென்னை நார் குவியல்கள் சாம்பலாயின

தென்னை நார் தொழிற்சாலையில் மீண்டும் தீ - 1500 டன் தென்னை நார் குவியல்கள் சாம்பலாயின

தென்னை நார் தொழிற்சாலையில் மீண்டும் தீ

தென்னை நார் தொழிற்சாலையில் மீண்டும் தீ

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியில் குரோவ்ரைட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

  • News18
  • Last Updated :
    பெரியகுளம் அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியில் குரோவ்ரைட் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. பாலைவனப்பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதற்காக தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார்களை பதப்படுத்தி மூலப்பொருளாக தயாரித்து இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

    கடந்த 30ஆம் தேதி இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1500 டன் தென்னை நார் குவியல்கள் சாம்பலாயின. சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    Also read... சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

    இந்நிலையில் மீண்டும் அதே ஆலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருந்த தென்னை நார்கள் எரிந்தன. ஆண்டிபட்டி, தேனி, வத்தலகுண்டு பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    -செய்தியாளர்: பழனிகுமார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி