Home /News /tamil-nadu /

வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் : 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் : 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணை

வைகை அணை

வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீரும், பாசனக்கால்வாய் வழியாக 569 கனஅடி என மொத்தம் வினாடிக்கு 1569 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    முழுக்கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்துஉபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ மக்கள் முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இரவு 10 மணிக்கு முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது.

    இதனையடுத்து வைகை அணையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டு, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.

    வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீரை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். தற்போது வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீரும், பாசனக்கால்வாய் வழியாக 569 கனஅடி என மொத்தம் வினாடிக்கு 1569 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Must Read : தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? ஆரஞ்சு அலர்ட்?

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், உபரியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் அதிகரித்து திறக்க வாய்ப்பு உள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று  எச்சரித்துள்ளனர்.

    செய்தியாளர் - பழனிகுமார், தேனி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Rain, Rain water, Vaigai dam level

    அடுத்த செய்தி