ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மருத்துவர்கள் அலட்சியம்: உயிருடன் இருந்த குழந்தையை அடக்கம் செய்ய சென்ற உறவினர்கள்.. சுடுகாட்டில் ஷாக்!

மருத்துவர்கள் அலட்சியம்: உயிருடன் இருந்த குழந்தையை அடக்கம் செய்ய சென்ற உறவினர்கள்.. சுடுகாட்டில் ஷாக்!

தேனி அரசு மருத்துவமனை

தேனி அரசு மருத்துவமனை

குழந்தையை எடுத்துச் சென்ற உறவினர்கள் மத வழக்கப்படி அடக்கம் செய்வதற்கு தயாரான போது குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிறந்த குழந்தை இறந்ததாக பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்த நிலையில் சுடுகாட்டுக்கு சென்று குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நிலையில் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிளவேந்திர ராஜா. கார் ஓட்டுநரான இவருக்கு  பாத்திமா மேரி (30) என்ற மனைவியும், ஜோஸ்லின் டெய்சி (8), ஆடல் (5) என  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  மூன்றாவது முறையாக பாத்திமா மேரி கர்ப்பம் தரித்து 6மாதம் ஆன நிலையில் நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டு, பனிக்குடம் அடைந்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து சிகிச்சைக்காக நேற்றிரவு  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட பாத்திமா மேரிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவமாக 700கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை நீண்ட நேரமாகியும் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்ததாக கூறிய  குழந்தையை பெற்றோர் பார்க்க விரும்பாததால் அதனை  உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

  Also Read:   குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!

  தாமரைக்குளம் பகுதிக்கு குழந்தையை எடுத்துச் சென்ற உறவினர்கள் மத வழக்கப்படி அடக்கம் செய்வதற்கு தயாரான போது குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தனர்.  உடனடியாக  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழத்தையை எடுத்து வந்தனர். அங்கு தீவிர பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  Also Read:   குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!

  இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரசவத்திற்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் 6மாதத்தில் வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இது ஒரு வகையில் அபார்ஷன் போன்றதாகும். குழந்தையின் எடையும் 700கிராம் என குறைவாக உள்ளது.    தற்போது எடுத்து வரப்பட்டு குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  மேலும் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பில் உள்ளது. இறந்ததாக கருதி ஒப்படைத்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிறந்த குழந்தை அசைவுகள் இல்லாததால் இறந்ததாக கருதி ஒப்படைத்த மருத்துவர்களின் செயல் மக்கள் மனதில் அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது.

  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

  தேனி செய்தியாளர் பழனிக்குமார்

  Published by:Arun
  First published:

  Tags: Govt Doctors, Periyakulam Constituency, Theni