10 ஆண்டுகளுக்கு பின் கருப்புச் சட்டையில் இருந்து வெள்ளை சட்டைக்கு மாறிய திமுக நிர்வாகி...

வெள்ளை சட்டைக்கு மாறிய திமுக நிர்வாகி சேகர்

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதால் 10ஆண்டுகளாக கருப்பு சட்டைகளையே அணிந்து வந்த திமுக கிளைச் செயலாளர் வெள்ளை சட்டைக்கு மாறினார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். முதல் முறையாக முதல்வராக பதவியேற்கும் அவரது வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

  இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 10ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் கருப்புச் சட்டை அணிந்து வந்த தேனியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இன்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் வெள்ளைச் சட்டை அணிந்துள்ளார்.

  தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். நாரயணத்தேவன்பட்டி திமுக கிளைச் செயலாரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு திமுக தோற்றதும் கருப்புச் சட்டை அணிந்தார். தொடர்ந்து நடைபெற்ற 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை திமுக தவற விட்டதால் கருப்புச்சட்டையையே தொடர்ந்து அணிந்து வந்தார்.  தற்போது 2021ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றதும்,  10 ஆண்டுகளாக கருப்புச்சட்டை அணிந்து வந்த சேகர் வெள்ளைச் சட்டைக்கு மாறினார்.  மேலும் படிக்க... மு.க.ஸ்டாலின் பதவியேற்பு... வீடு வீடாக இனிப்பு வழங்கிய திமுகவினர்

  நாரயணத்தேவன்பட்டியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் இருந்த திமுகவினர் சேகருக்கு வெள்சைச்சட்டைகள் அன்பளிப்பாக வழங்கி உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: சுப.பழனிக்குமார், தேனி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: