Home /News /tamil-nadu /

அமமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த திமுக கவுன்சிலர்.. வெற்றி பெற்ற கணவரை உற்சாகத்தில் அலேக்காக தூக்கிய மனைவி..

அமமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த திமுக கவுன்சிலர்.. வெற்றி பெற்ற கணவரை உற்சாகத்தில் அலேக்காக தூக்கிய மனைவி..

துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார்.

துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார்.

துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவளித்த திமுக கவுன்சிலர், அதிமுக மற்றும் அமமுக ஆதரவுடன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15வார்டுகள் உள்ளன. இதில் திமுக -7, அதிமுக -2 மற்றும் அமமுக -6 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் அங்கு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் குறிப்பாக திமுக - அமமுக இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் பழனிசெட்டிபட்டியில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக கவுன்சிலர்களில் ஒருவர், திமுகவிற்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என திமுக கணக்குப் போட்டது. ஆனால் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நடந்ததோ வேறு.

இதையும் படிங்க: உக்ரைனில் மேலும் ஒரு இந்தியர் சுடப்பட்டார்: மத்திய அமைச்சர் தகவல்

ஒரு திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இருவரின் ஆதரவுடன் அமமுக கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தி 8வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் பவானி தோல்வி அடைந்தார். இதையடுத்து  தலைவர் பதவியை கைப்பற்ற உதவிய திமுக கவுன்சிலர் மணிமாறன் என்பவருக்கு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதற்கு  அமமுக கவுன்சிலர் 6 பேர் மற்றும் ஒரு அதிமுக கவுன்சிலர் என  7 பேரும் தயாராகினர்‌.

அதன் படி, மாலையில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அதிமுக கவுன்சிலர் என எதிர் தரப்பினர் யாரும் பங்கேற்காததால், திமுகவைச் சேர்ந்த மணிமாறன், அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்களின் ஒருமித்த ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக வெற்றி பெற்று வீட்டிற்கு வந்த தனது கணவர் மணிமாறனை அவரது மனைவி உற்சாகத்தில் அலேக்காக தூக்கி சந்தோசமடைந்தார். மேலும் அனைவரின் கண்களும் நீங்க வேண்டும் எனக் கூறி ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி