வாஜ்பாய் நினைவு நாளை யொட்டி அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று அஞ்சலி செலுத்துவதற்காக வந்த போது கொடிக்கம்பம் அகற்றப்பட்டிருப்பதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 • Share this:
  தேனி அருகே சாலையோரத்தில் இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.

  நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கம்பம் நகர பாஜக சார்பில் அதே இடத்தில் மீண்டும் தற்காலிக கொடிக்கம்பம் நிறுவி கொண்டாடப்பட்டது  இதையடுத்து மீண்டும் காவல்துறையினரால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

  Also Read: தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!

  இந்நிலையில்  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று அஞ்சலி செலுத்துவதற்காக வந்த போது கொடிக்கம்பம் அகற்றப்பட்டிருப்பதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். கொடிக்கம்பம் அகற்றப்பட்டிருப்பதை கண்டித்து காந்தி சிலையில் இருந்து  கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஊர்வலமாக பாஜகவினர் சென்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கம்பம் வ.உ.சி. திடல் வரையில் சென்றவர்களை  ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறையினர்  மறுத்ததால் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின், பிணையில் வெளியே விட்டனர்.    பாஜகவினரின் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
  Published by:Arun
  First published: