கொரோனா பரவல்; முன்னறிவிப்பின்றி தேனி உழவர் சந்தை மூடல்!

கொரோனா பரவல்; முன்னறிவிப்பின்றி தேனி உழவர் சந்தை மூடல்!

தேனி உழவர் சந்தை

கொரோனா பரவலால்  முன்னறிவிப்பின்றி தேனி உழவர் சந்தை மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். 

 • Share this:
  கொரோனா பரவலால்  முன்னறிவிப்பின்றி தேனி உழவர் சந்தை மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

  கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக  பரவி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் தேனி பெரியகுளம் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்வது வழக்கம். குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பதால் இங்கு காய் கறிகள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.

  இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உழவர் சந்தையை நேற்று  மூடிவிட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் உழவர் சந்தை மூடப்பட்ட விபரம் அறியாத விவசாயிகள் இன்று வழக்கம் போல வந்து பார்க்கையில் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்  பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  இதுகுறித்து உழவர் சந்தையில் உள்ள அதிகாரிகளிடம்  கேட்ட போது,  இட நெருக்கடியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது ரத்தினம்நகர் பகுதியில் உள்ள வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உழவர் சந்தை தற்காலிகமாக செயல்பட்டது அதே இடத்தில் நாளை முதல் உழவர் சந்தை செயல்படும் என தெரிவித்தனர்.

  தற்போது உள்ள உழவர் சந்தைக்கு செல்லும் நான்கு பாதைகளையும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டதால் அருகே உள்ள தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பெறும் சிரமத்துடன் தடுப்புகளை கடந்து செல்கின்றனர்.

  இதனிடையே முன்னறிவிப்பின்றி தேனி உழவர் சந்தை மூடப்பட்டதை கண்டித்தும், மீண்டும் தற்போதுள்ள இடத்தில் உழவர் சந்தை செயல்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

  செய்தியாளர் - பழனிகுமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: