தேனி மாவட்டத்தை மிரட்டும் கொரோனா 2ம் அலை.. தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

தேனி கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் நோய் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 • Share this:
  தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நிலையில் 80 க்கு மேற்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.

  நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மாவட்டத்தில் நேற்று வரை 840 நபர்களுக்கு கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்நிலையில் இன்று புதிதாக 175 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பில் மாவட்டத்தில் 1015 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்து பொதுமக்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

  தேனி நகர் பகுதியில் உள்ள பாரஸ்ட் ரோடு 6 வது தெருவைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் உள்ள 15 க்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறை சார்பாக தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

  மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 85 இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் நோய் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  தேனி செய்தியாளர் பழனிகுமார்
  Published by:Arun
  First published: