தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33வார்டுகள் உள்ளன. இதில் நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவற்றில்
திமுக 19 வார்டிலும்,
அதிமுக - 7 வார்டிலும்,
காங்கிரஸ் -2, அமமுக -2,
பாஜக - 1, மற்றும் சுயேட்சை 2 வார்டிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் பதவியை திமுக தலைமையகம் ஒதுக்கியது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பாக 22ஆவது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்பு மனுத் தாக்கல் செய்யவிருந்த நிலையில், 10வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் அவரை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார். இதனால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் ஒரு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா நகர்மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்பட்டதன் காரணமாக, மாவட்ட காங்கிரஸார் அதிருப்தி அடைத்தனர். இந்நிலையில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் பழனிச்செட்டிபட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய முருகேசன் கூறுகையில், தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைமைக் கழகத்தின் அறிவிப்பை மீறி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நகர பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் தங்களை அலைக்கழிப்பு செய்தனர். கூட்டணி தர்மத்திற்கு எதிர்ப்பாக காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து 10ஆவது வார்டில் போட்டியிட்ட ரேணுப்பிரியா தலைவராக வெற்றி பெற செய்துள்ளனர்.
Must Read : திமுகவை சேர்ந்த 2 பேர் மனுதாக்கல்... சாலை மறியல் - பூந்தமல்லி நகராட்சி தேர்தல் நிறுத்தி வைப்பு
கூட்டணி தர்மத்தை மீறி தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்றது குறித்து மாநில காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அளித்துள்ளதாகவும். தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும் இது குறித்து புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கூட்டணி தர்மத்தை மீறி தேனி - அல்லிநகரம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக நகர்மன்ற தலைவரின் பதவியை ரத்து செய்ய வேண்டும்.
Read More : திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்
மீண்டும் மறு தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திருமதி சர்குணத்தை நகர் மன்ற தலைவராக நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் : பழனிகுமார், தேனி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.