கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு அரசு மரியாதை

டந்த ஜீன் 1ஆம் தேதி கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 • Share this:
  போடியில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

  தேனி மாவட்டம் போடி நகர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அழகர்ராஜா(58). பணியில் இருந்த இவர் கடந்த ஜீன் 1ஆம் தேதி கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் நேற்று காலை சிறப்பு சார்பு ஆய்வாளர் அழகர்ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி போடி மின்மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.

  Also read: ஆப் மூலம் கட்டிய பணத்திற்கு நாள்தோறும் அதிக வட்டி.. புதிய வகை நூதன மோசடி!!

  முன்னதாக பணியில் இருந்த போது கொரோனா பாதிக்கப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு 21குண்டுகள் முழங்க காவல் துறையினர் அரசு மரியாதை செலுத்தினர்.

  கொரோனா பெருந்தெற்றால் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்ட காவலர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - பழனிக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: