Home /News /tamil-nadu /

அடுக்குமொழி வசனத்தில் வாக்குமூலம்; காவலர்களை கலங்கடித்த திருடன் - வைரலாகும் வீடியோ

அடுக்குமொழி வசனத்தில் வாக்குமூலம்; காவலர்களை கலங்கடித்த திருடன் - வைரலாகும் வீடியோ

Youtube Video

தேனி மாவட்டத்தில் அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்குமூலம் அளித்த பைக் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

    தேனி மாவட்டத்தில் விலை உயர்ந்த இருச்சக்கரவாகனங்கள் காணாமல் போவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இருச்சக்கரவாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர் அவற்றை, பெட்ரோல் தீரும் வரை ஓட்டிச் சென்று, சாலையோரமாக நிறுத்திச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 18ம் தேதி அரண்மனைப் புதூர் விளக்குப் பகுதியில் சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்பில்டு பைக்கை திருடிச் சென்று நபர் பழனிசெட்டிப்பட்டி போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.

    திருடப்பட்ட இருச்சக்கரவாகனம் எங்கே என போலீசார் அவரிடம் விசாரித்த போது அடுக்கு மொழியில் வசனம் பேசுவது போல் வாக்குமூலம் அளித்தார். ஏற்கெனவே பலமுறை காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்து பழகியவர் போல, தாத்தா, தந்தை பெயரைக் குறிப்பிட்டு வாக்குமூலத்தை தொடங்கிய திருடர்.வீட்டிற்கு எதிரே ஆசையை தூண்டும் வகையில் பளபளவென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்பில்டு வாகனம் தன்னைத் திருடத் தூண்டியதாக கூறினார்

    அமைதியான ரம்மியமான சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த இருச்சக்கரவாகனத்தில் சாவி இருந்ததால் வாகன உரிமையாளர் தனது ஆசையை தூண்டி, தவறு செய்ய வாய்ப்பளித்ததாக குறிப்பிட்டார். பயத்துக்கே பயம் காட்டு தல ரசிகனாகிய தான் இருச்சக்கரவாகனத்தை எடுத்துச் சென்ற போது ஆண்டிபட்டி கணவாய் தாண்டியதும் செயின் அறுந்ததால் நிறுத்தி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இருச்சக்கரவாகனத்தின் விலையை ஜிஎஸ்டி எரி ஏற்றத்துடன் துல்லியமாகக் குறிப்பிட்ட அவர் பைக்கின் நிறத்தை கூறி வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார். கஞ்சா பழக்கம் கொண்ட தான் கோடாங்கிபட்டிக்கு கஞ்சா வாங்க வரும் போது இருச்சக்கரவாகனம் பழுதடைந்து விட்டதாக அவர் சிரிக்காமல் கூறினார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் தான் மறுநாள் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    Also Read : கொலையில் முடிந்த குழாயடி சண்டை.. பொள்ளாச்சியில் பயங்கரம்

    போதைப் பழக்கத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டவர் குறித்து விசாரித்த போது அவர் மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மதுரை அழகர் கோவில் அருகே மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கிருந்து தப்பி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது அவர் திருடிச் செல்வதை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் உறுதி செய்தனர். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime News, Theni

    அடுத்த செய்தி