ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாலை அணிந்து விரதத்தைத் துவக்க சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்

மாலை அணிந்து விரதத்தைத் துவக்க சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்

சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள்

சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள்

மாலை அணிந்து விரதத்தை துவக்க வந்த பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க தடை காரணமாக ஆற்றங் கரையோரமாக புனித நீராடினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம்.  அந்த வகையில், கார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் துவக்க சுருளி அருவியில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர்.

  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். மாலை அணிந்து விரதம் தொடங்கும் நிகழ்ச்சி கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று துவங்கியது. இன்று முதல் 48 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடைபெறும்.

  ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளன்று தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், அனுமந்தன்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுருளி அறிவிக்கு வந்து புனித நீராடி சுருளி மலை பகுதியில் உள்ள ஐயப்ப சாமி கோவில், பூத நாராயணர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குருசாமிகள் மூலமாக மாலை அணிந்து செல்வது வழக்கம்.

  இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுருளி அருவி பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று சுருளி அருவி பகுதியில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

  மாலை அணிந்து விரதத்தை துவக்க வந்த பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க தடை காரணமாக ஆற்றங் கரையோரமாக புனித நீராடி கற்பக விநாயகர் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், ஐயப்ப சுவாமி கோவில், பூத நாராயணன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சரண கோஷங்கள் முழங்க மாலை அணிவித்து தங்களது விரதத்தை துவக்கினர்.

  Must Read : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை : 9 இடங்களில் சோதனை சாவடிகள்

  முன்னதாக குருசாமி தலைமையில் பக்தர்கள் புனித நீராடி ஆறாட்டு முடிந்தபின் விரதம் இருந்த பக்தர்கள் கருப்பு, காவி உடை அணிந்து, துளசி மாலை, சந்தன மாலைகளை சரண கோஷம் முழங்க உற்சவர் முன்பு குருசாமி கையால் மாலையை அணிந்து சபரி யாத்திரை கலைக்கான விரதத்தை தொடங்கினர்.

  செய்தியாளர் - பழனிகுமார், தேனி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Sabarimala Ayyappan, Theni