Home /News /tamil-nadu /

தேசிய தடுப்பூசி தினம்... தேனியில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

தேசிய தடுப்பூசி தினம்... தேனியில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

National Vaccine Day : தேனியில் தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு தடுப்பூசி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி  வைத்தார்.

    தேனி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் பெண்கள் சமூக பொருளாதார முன்னேற்ற சங்கம் சார்பாக தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து இன்று பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் தொழிற்கல்வி  மாணவ -  மாணவியர்கள், பெண்கள் சங்கத்தினர் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ -  மாணவியர்கள் தடுப்பூசியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

    Must Read : 12-14 வயது சிறார்களுக்கான பிரத்யேக கொரோனா தடுப்பூசி... சிறப்பம்சங்கள் என்ன?

    தேனி பங்களாமேட்டில் தொடங்கி நகரின் முக்கிய இடங்களான மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை, ரயில்வே கேட், கான்வென்ட் பகுதி வழியாக சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது.

    செய்தியாளர் : பழனிகுமார், தேனி
    Published by:Suresh V
    First published:

    Tags: Rally, Theni, Vaccination

    அடுத்த செய்தி