தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நேற்று பிற்பகல் வந்த ஆட்டோ மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த தேனி ஜவஹர் நகரைச் சேர்ந்த கண்ணன்(34), மணிகண்டன்(40), பழனிச்சாமி(45) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் குமார்(22) மற்றும் பயணிகள் நாகராஜ்(27), கணேசன்(49) ஆகியோர் காயம் அடைந்தனர்.விபத்துக்குள்ளான அனைவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், மணிகண்டன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் கண்ணன் செல்லும் வழியிலும், மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று பிறகும் அடுத்தடுத்து பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read : 24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி... ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார் மனு
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டாரெட்டி(36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சாலையில் இருந்து தேனி நோக்கி வந்த ஆட்டோ பங்களாமேடு பகுதியில் உள்ள பழைய டிவிஎஸ் ரோடு பிரிவில் திரும்பும் போது நிலை தடுமாறி கவிழ்ந்தது, அப்போது எதிரே தேனியில் இருந்து மதுரை சாலையில் வந்த லாரி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. பதறவைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.