தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பழனி செட்டிபட்டி பேரூராட்சி. மொத்தமுள்ள 15 வார்டுகளில்
திமுக 7வார்டிலும், அமமுக 6 வார்டிலும்
அதிமுக 2 வார்டிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் 15ஆவது வார்டு கவுன்சிலர் பவானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் 11ஆவது வார்டு கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தி போட்டியிட்டார்.
இதில், ஒரு திமுக மற்றும் ஒரு அதிமுக கவுன்சிலர்கள், 6 அமமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் அமமுக வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கவுன்சிலருக்கு 6 திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அதிமுக கவுன்சிலர் என 7 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
Must Read : விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி - சாலைமறியல்... போலீஸ் குவிப்பு
இதனால் அமமுக கவுன்சிலர் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.