காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு! அதிர்ச்சியடைந்த காவலர்கள்..

தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய போலீசார்..

ஆண்டிபட்டியில் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்த மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்களை திரும்பத்தரக் கோரி காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மைக்செட் உரிமையாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றியதால் உயிரிழப்பு தவிர்ப்பு.     

 • Share this:
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். மைக்செட் உரிமையாளரான இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேரன்பாண்டியன் என்பவர் தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக ரூ.1,000 கொடுத்து மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்கள் வாடகைக்கு எடுத்து சத்யா நகர் பகுதியில் ஒலிபரப்பு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மைக்செட் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்றனர்.      

  இதையடுத்து ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் தொடர்ந்து சேரன்பாண்டியன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் மைக்செட்டை தருமாறு கேட்டு வந்துள்ளனர். இதனிடையே மைக்செட் வாடகைக்கு எடுத்த சேரன் பாண்டியன் உயிரிழந்ததால் அவரது இறப்புச்சான்றிதழை தருமாறு கேட்டு காவல்துறையினர் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வக்குமார் இன்று ஆண்டிபட்டி காவல்நிலையம் சென்று தனது உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  அங்கிருந்த காவல்துறையினர் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தடுத்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.  பின்னர் விசாரணை நடத்திய காவல் துறையினர் பறிமுதல் செய்த மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்களை செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

  இச்சம்பவத்தால் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: