விவசாயிகளின் துயர்போக்க விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு - பொதுமக்கள் அமோக வரவேற்பு
கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி தேனி வாரச்சந்தைக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு இலவசமாக விஜய் ரசிகர்கள் வினியோகம் செய்தனர்.

- News18 Tamil
- Last Updated: November 28, 2020, 9:05 PM IST
வடகிழக்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் காய்கறி உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களும் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதில் கொத்தமல்லி தலைகள் ஒரு கட்டு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விலை வீழ்ச்சி காரணமாக கொத்தமல்லி தழைகளை பறிப்பவர்களுக்கான கூலி வாகனச் செலவு உள்ளிட்டவைகளுக்கு விவசாயிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருந்தது இதன் காரணமாக பலர் கொத்தமல்லித் தழைகளை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பல ஏக்கரில் கொத்தமல்லி தலைகள் அழுகிய நிலையில் காணப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் கொத்தமல்லி தலைகளை ஆற்றில் வீசி விட்டனர்.
கொத்தமல்லி தழைகளை விவசாயிகள் ஆற்றில் வீசியது குறித்து விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது, அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி சார்பாக கொத்தமல்லி தழைகள் விளைவித்த விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி தேனி வாரச்சந்தைக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தனர். இலவசமாக வழங்கப்பட்ட கொத்தமல்லித் தழைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இலவசமாக கொத்தமல்லித் தழைகளை வழங்கியது குறித்து விஜய் ரசிகர் பிரகாஷ் கூறுகையில், ''விலை வீழ்ச்சியால் கொத்தமல்லி தழைகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு கூட வழியில்லாமல் விவசாயிகள் தவித்துள்ளனர். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பாதிப்படையும் கூடாது என்ற நோக்கத்தோடு தோட்டத்திற்கு நேரடியாக சென்று எங்களது வாகனத்திலேயே 500 கிலோ கொத்தமல்லி தழைகளை 3,500 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தோம் என தெரிவித்தார்.
விஜய் ரசிகர்கள் எடுத்த இந்த அசத்தல் வால் முடிவு விவசாயி மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
விலை வீழ்ச்சி காரணமாக கொத்தமல்லி தழைகளை பறிப்பவர்களுக்கான கூலி வாகனச் செலவு உள்ளிட்டவைகளுக்கு விவசாயிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருந்தது இதன் காரணமாக பலர் கொத்தமல்லித் தழைகளை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பல ஏக்கரில் கொத்தமல்லி தலைகள் அழுகிய நிலையில் காணப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் கொத்தமல்லி தலைகளை ஆற்றில் வீசி விட்டனர்.
கொத்தமல்லி தழைகளை விவசாயிகள் ஆற்றில் வீசியது குறித்து விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது, அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி சார்பாக கொத்தமல்லி தழைகள் விளைவித்த விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி தேனி வாரச்சந்தைக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தனர். இலவசமாக வழங்கப்பட்ட கொத்தமல்லித் தழைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
விஜய் ரசிகர்கள் எடுத்த இந்த அசத்தல் வால் முடிவு விவசாயி மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.