• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Share this:
    தென் மேற்கு பருவ காற்று காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு பருவ காற்று காரணமாக, இன்று (திங்கட் கிழமை) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

    செப்டம்பர் 28 ஆம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    புதன் கிழமை (29ஆம் தேதி) கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 30ஆம் தேதி (வியாழக்கிழமை) வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    அக்டோபர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கலியல் (கன்னியாகுமரி) 17, குழித்துறை (கன்னியாகுமரி) 15, சூரலக்கோடு (கன்னியாகுமரி) 14, தக்கலை (கன்னியாகுமரி) 13, கன்னியாகுமரி, நாகர்கோயில் (கன்னியாகுமரி) தலா 12, மைலாடி (கன்னியாகுமரி) 11, கொட்டாரம் (கன்னியாகுமரி) 9, பொன்னமராவதி (புதுக்கோட்டை) 8, கன்னிமார் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 7, பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 6, வால்பாறை (கோவை), ஏற்காடு (சேலம்), குடுமியான்மலை (புதுக்கோட்டை) தலா 5, பெரியாறு (தேனி) 4, அன்னவாசல் (புதுக்கோட்டை), கடவனுர் (கள்ளக்குறிச்சி) தலா 3, பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), புலிப்பட்டி (மதுரை) தலா 2, அருப்புக்கோட்டை (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி ) தலா 1.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    வங்கக் கடல் பகுதிகளில், (இன்று) குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Must Read : ஜி.எஸ்.டி. கவுன்சில்: பிடிஆருக்கு முக்கிய பொறுப்பு!

    அரபிக்கடல் பகுதிகள்:

    கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: