சென்னையில் தொடர் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் தொடர் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரோட குற்றங்களில் ஈடுபட்டுவந்த மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் தொடர் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது
சென்னையில் தொடர் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது - மற்றொரு கொள்ளையருக்கு போலீஸ் வலைவீச்சு
  • Share this:
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  லட்சுமணன் (53) நடந்து செல்லும்போது திடீரென்று  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள் லட்சுமணனிடம் செல்போன் பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது லட்சுமணன் அவர்களைப் பின்புறமாகப் பிடிக்கும்போது அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். அதில் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதே இடத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லட்சுமி (17) என்ற பெண் தந்தையோடு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேப்பேரி சட்டம் ஒமுங்கு ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்த இரண்டு சம்பவங்களுமே மாலையில் என்பதால் ஒரே கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த காவல்துறையினர் அந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்த தினேஷ்  (24) என்பவர் என்பது தெரியவரவே அவரைக் கைது செய்தனர்.


மேலும், இவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளி யுவராஜ் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading