தேனி மாவட்டம் கூடலூரில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்று உள்ளனர் மர்ம நபர்கள்.
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தொட்டியார் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார் கோபால். இவர் கேரளாவில் ஏலத் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.கடந்த இரண்டு மாதங்களாக கோபால் கேரள மாநிலம் கரிக்குழி என்ற இடத்தில் குடும்பத்துடன் தங்கி விவசாயத்தை கவனித்து வருகிறார்.
Also Read: ’ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை’ - ட்விட்டரில் இந்திராகாந்தி உரையை பதிவிட்ட தமிழக காங்கிரஸ்
இதற்கிடையே, தனது மகள் வீட்டு விஷேசத்திற்கு வங்கிகளில் அடகு வைத்திருந்த சுமார் 46 பவுன் நகைகளை மீட்டு வீட்டில் வைத்துள்ளார். மேலும், ஏலக்காய் விற்ற ரூபாய் மூன்று லட்சத்தையும் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். பின்னர், நேற்றைய தினம் மாலை மீண்டும் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருட்டு சம்பவம் :-
இதனிடையே, இன்று காலை கோபால் வீட்டு அருகே உள்ளவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் வாசல் படிகளில் மிளகாய் பொடி தூவி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக கூடலூர் காவல்துறையினருக்கும் வீட்டின் உரிமையாளர் கோபாலுக்கும் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த கூடலூர் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கோபால் வீட்டின் முன்பக்கம் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டிற்குள் பொருட்கள் மற்றும் நகை வைத்திருந்த பெட்டிகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. வீட்டிற்குள் வைத்திருந்த நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக வீட்டின் உரிமையாளர் கோபால் தெரிவித்துள்ளார். மேலும், வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல் கண்காணிப்பாளர் ஆய்வு :-
இதுதொடர்பாக கோபால் அளித்த புகாரின் பேரில் கூடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றது குறித்தும், திருடு போன பொருட்களின் மதிப்பு குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவிவும் ஆய்வு செய்தார். மேலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூடலூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.