• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஊரடங்கு காலத்தில் குறைந்த செயின், மொபைல் பறிப்பு சம்பவங்கள் - தரவுகள் சொல்வது என்ன?

சென்னையில் ஊரடங்கு காலத்தில் குறைந்த செயின், மொபைல் பறிப்பு சம்பவங்கள் - தரவுகள் சொல்வது என்ன?

செயின் பறிப்பு(மாதிரிப் படம்)

செயின் பறிப்பு(மாதிரிப் படம்)

சென்னையில் ஊரடங்கு கால கட்டத்தில் செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு சம்பங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைவாசிகள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு பயந்த காலம் போய் தற்போது பகலிலேயே வெளியே வருவதற்கு பெரும் சவாலான சூழ்நிலை உருவாகி உள்ளது. காரணம் மொபைல் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னை முழுவதும் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு குற்றவாளிகள் உடனுக்குடன் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு குறைந்தபாடில்லை.

பெண்களை மட்டுமே குறிவைத்து செயின், மொபைல் பறிப்பவர்கள், வயதானவர்களை மட்டுமே குறிவைத்து செயின், மொபைல் பறிப்பவர்கள், சாலையில் தனியாக செல்பவர்களை மட்டும் குறிவைத்து செயின், மொபைல் பறிப்பவர்கள், குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து செயின், மொபைல் பறிப்பவர்கள் என திருடர்கள் சிசிடிவி காட்சிகளின் கண்களில் சிக்கிக் கொள்ளாமல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பதிப்பு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து இருந்தன. கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு என 615 புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகின.

அதற்கடுத்த ஆண்டுகளில் சென்னை முழுவதும் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபொழுது குற்றவாளிகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு செயின் மற்றும் மொபைல் பறிப்பு குற்றங்கள் வெகுவாக குறையத் தொடங்கின.

இதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு 443 வழக்குகள் மட்டுமே சென்னை காவல் நிலையங்களில் பதிவாகின. அதேபோல 2019ஆம் ஆண்டு செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்புக்காக 307 வழக்குகள் சென்னை காவல் நிலையங்களில் பதியப்பட்டன.

இந்த நிலையில் 2020 ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரனோ தொற்றின் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் சென்னையில் குறைந்திருந்தது. குறிப்பாக கொள்ளைச் சம்பவம் 75 சதவிதமாக குறைந்திருந்தது. அதேபோல வீடு புகுந்து திருடுதல் 59 சதவிகிதமாக குறைந்திருந்தது.

மொத்தமாக ஊரடங்கு காலத்தில் மட்டும் 79 சதவிகித குற்ற சம்பவங்கள் சென்னையில் குறைந்திருந்தன. இந்த நிலையில் 2020 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மொபைல் பறிப்பு, செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுக் கொள்ளை, திருட்டு போன்றவை என 520 வழக்குகள் சென்னையில் பதிவாகி உள்ளன.

இவற்றில் 370 வழக்குகள் கண்டறியப்பட்டு அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பை விட மொபைல் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் பெருமளவில் குறைந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களது வீட்டிலேயே இருந்ததாலும், அதிகளவு போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததாலும், செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு குற்றச் செயல்கள் குறைந்திருந்ததாகவும், அதன் பிறகு காவல்துறையினர் வழக்கமான பணியை மேற்கொண்டு வருவதால் ஓரிரு மொபைல் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு சம்வங்கள் ஆங்காங்கு நடந்தேறி வருவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: