மொய் விருந்து மூலம் வசூலான 4 கோடி ரூபாயை வீடு புகுந்து திருட முயற்சி!

news18
Updated: July 27, 2019, 11:48 AM IST
மொய் விருந்து மூலம் வசூலான 4 கோடி ரூபாயை வீடு புகுந்து திருட முயற்சி!
கொள்ளை முயற்சி நடந்த வீடு
news18
Updated: July 27, 2019, 11:48 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நான்கு கோடி மொய் வாங்கியவரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் நேற்று முன் தினம் நடந்த மொய் விருந்து விழாவில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு ரூபாய் 4 கோடி மொய் வசூல் ஆனது.

மொய் தொகையை அவர் வீட்டில் வைத்திருந்த நிலையில் நேற்று இரவு வடகாடு  கூட்டம் புஞ்சையில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருகே இருந்தவர்கள் விரட்டியதில் சோளக்கொல்லைக்குள் ஒழிந்திருந்த ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டபோது இருப்பவர் அருகே உள்ள அணவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவனேசன் என்பதும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் வெளிநாடு செல்ல பணம் கட்டி ஏமாந்த விட்டதாகவும் அந்த கடனை அடைக்க கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் திருட முயன்ற தாகவும் கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...


First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...