Home /News /tamil-nadu /

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தளர்வுகள்

தளர்வுகள்

திரையரங்குகள் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றி  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கூட்ட அரங்குகளில்  அனைத்து வகையான  கலாச்சார  நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளில்  பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, ஊரடங்கில் அடுத்தக் கட்ட தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.  ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து  ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும், அனைத்து வகை  கடைகள்,  உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு  தளர்த்தப்பட்டுள்ளது.

    திரையரங்குகள் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றி  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கூட்ட அரங்குகளில்  அனைத்து வகையான  கலாச்சார  நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில்  பயிற்சிகள்,  விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை  தேவைகளுக்காக  நீச்சல் குளங்களை  பயன்படுத்தவும் அனுமதிகப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Tamilnadu, Theatre

    அடுத்த செய்தி