• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயிலுக்குப் போனா சோறு கிடைக்கும் : போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கிய இளைஞர்

ஜெயிலுக்குப் போனா சோறு கிடைக்கும் : போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கிய இளைஞர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்கமால் பசியால் வாடியுள்ளார் இளைஞர் பிஜூ.

  • Share this:
    திருவனந்தபுரத்தில் சாப்பாட்டுக்காக போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு இளைஞர் ஒருவர் சிறைக்கு சென்ற சோக சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞர் சாப்பாட்டுக்காக நான் சிறைக்கு செல்லப்போகிறேன் என்று கூறிய வாக்கு மூலம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருக்கிறது ஆற்றிங்கல் அய்லம் என்ற ஊர். அந்த ஊரைதச் சேர்ந்தவர் பிஜூ. 29 வயதான இவருக்கு வேலை கிடைக்க வில்லை. எனவே, பணமும் கையில் இல்லததால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் துன்பப்பட்டு வந்துள்ளார். இதனால், பசிக் கொடுமையால் வெறுப்படைந்துள்ளார்.

    இந்நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் காவல் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் மீது கல் வீசி தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறையில் 3 வேளை சாப்பாடு கிடைத்தது. இந்த நிலையில் அந்த இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பிஜூ, பல இடங்களில் மீண்டும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கடைக்கவில்லை. இதனால் மீண்டும் ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்கமால் பசியால் வாடியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆற்றிங்கல் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது கல் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அப்போது, வேலை தேடி பல்வேறு இடங்களுக்கும் அலைந்ததாகவும், ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறிய அந்த இளைஞர், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் சிறைக்கு சென்றால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்படி கல்வீசியதாகவும் கூறினார்.

    Must Read : ரவுடிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: