பொய் வழக்கில் கைதுசெய்து காவலர்கள் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு... காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் மீது புகார்

பொய் வழக்கில் கைதுசெய்து காவலர்கள் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு... காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் மீது புகார்
கோப்புப் படம்
  • Share this:
திருச்சி மாவட்டம் துறையூரில் பொய் வழக்கில் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொல்லபப்பட்டியைச் சேர்ந்தவர் ரகுநாத்(23). இவர் உள்ளிட்ட 6 பேர் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாக  துறையூர் காவல் நிலைய போலீசார் கடந்த மாதம் 6-ஆம் தேதி கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு பிணையில் வந்துள்ள ரகுநாத் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள புகார் மனுவில், நான் கடந்த 5-ஆம் தேதி இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்த போலீசார்,  கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.


எனக்கு எந்த வழக்கிலும் தொடர்பில்லை என்று சொல்லியும் கண்மூடித்தனமாக, தொடர்ந்து  தாக்கினர். வலி தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்காமல், மிரட்டி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தற்போது பிணையில் வந்து, மருத்துவ சிகிச்சை எடுத்துள்ளேன்.

எனவே பொய் வழக்கில் கைது செய்து, தாக்கிய காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் போலீசார் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் தன்னை மிரட்டி வருவதாகவும் ரகுநாத் தெரிவித்துள்ளார்.Also read...  இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் இல்லை.. அமைச்சர் சி.வி சண்முகம்..

சாத்தான்குளத்தில் காவல் நிலைய தாக்குதலில் தந்தை மகன் இறப்பு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் திருச்சி துறையூரில் பொய் வழக்கில், கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading