ஆசைக்கு இணங்க மறுத்ததால் மூதாட்டி மீது கல்லைப் போட்டு கொன்றேன்: கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்

குற்றவாளி ஜெயக்குமார்

மூதாட்டி உயிரோடு இருந்தால், தான் மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற அச்சத்தில் குடிபோதையில் இருந்த ஜெயக்குமார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

  • Share this:
    சென்னை திருவொற்றியூரில் 68 வயது மூதாட்டி மீது கல்லை போட்டு கொலை செய்த 32 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

    சென்னை திருவொற்றியூர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற திருவொற்றியூர் காவல்துறையினர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பதும், இவர் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே வந்தது, பிறகு வீட்டிற்கு சென்று விடுவதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த திருவொற்றியூர் காவல்துறையினருக்கு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஏதும் சரிவர பதிவு ஆகாததால், கொலையாளி பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால், குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல நாட்களாக தேடியும் துப்பு கிடைக்காததால் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

    வேறு ஒரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கொலை நடந்த அன்று இரவு, ஒரு நபர் வேகமாக சென்று கண்டெய்னர் லாரியில் ஏறி செல்வது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த, ஆய்வாளர் தலைமையிலான குழு எண்ணூர் விரைந்தது.

    அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்று தெரியவந்தது. அவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், மருத்துவமனை அருகில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு சென்றபோது அங்கிருந்த மூதாட்டியை கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் சென்று உடலுறவுக்கு அழைத்ததாகவும், அவர் மறுக்கவே வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியபோது, மூதாட்டி அங்கிருந்து எழுந்து, தப்பி ஓடியதால் ஆத்திரமடைந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை பலமாக தாக்கியதாகத் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மேலும், உயிரோடு இருந்தால், தான் மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற அச்சத்தில் குடிபோதையில். அருகில் இருந்த கல்லை மூதாட்டியின் மீது போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கொலையாளி ஜெயக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Must Read : கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய செவிலியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்

     

    இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் மீது, வழக்கு பதிவு செய்துள்ள திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 68 வயது மூதாட்டியை 32 வயது வாலிபர் தனது ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில், கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Suresh V
    First published: