ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்.. காத்திருக்கும் காளையர்கள்..!

மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்.. காத்திருக்கும் காளையர்கள்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

Alanganallur jallikattu 2023 | உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காளைகளை தழுவ 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். போட்டியில் அதிக காளைகளை தழுவி முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பைக் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இது தவிர பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு, காளைகளை பிடிக்கும் ஒவ்வொரு வீரருக்கு தங்க மோதிரம், தங்க காசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட அதிகாலை முதலே அதிகளவில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர்.

காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ள 522 வீரர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையும் ஆரம்பமாகியுள்ளது. முதல் சுற்றில் 50 வீரர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சுமார் 1200 காளைகளுக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 1000 காளைகளை வாடிவாசல் களம் கானும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Alanganallur, Jallikattu