• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சற்று நேரத்தில் தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி..

சற்று நேரத்தில் தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி..

கோப்புப் படம்

கோப்புப் படம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

  • Share this:
    பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன்தினமும், பாலமேட்டில் நேற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசாக காரை வென்றார். 17 காளைகளை தழுவி இரண்டாவது பரிசை வென்ற பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், தனக்கு வழங்கப்பட்ட ஒரு சவரன் மோதிரத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர். இந்தப் போட்டியில், 700 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடக்குவதற்காக 655 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாடிவாசல் முதல் பார்வையாளர்கள் மேடை வரையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையையொட்டி அலங்காநல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...மினி பேருந்து, லாரி மோதி கோர விபத்து: 11 பேர் உயிரிழப்பு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் அதிக காளைகளை அடக்கி முதலாவது இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: