Home » News » Tamil-nadu » THE WORK OF ALLOCATING ELECTION WORK FOR PUBLIC SERVANTS AND TEACHERS HAS STARTED IN TAMIL NADU VIN GEE

சட்டப்பேரவைத் தேர்தல்: அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான  தேர்தல் பணி ஒதுக்கீடு...!

பெரும்பாலும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடக்கூடிய நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்: அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான  தேர்தல் பணி ஒதுக்கீடு...!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 17, 2020, 5:55 PM IST
  • Share this:
தமிழக  சட்டப்பேரவைத் தேர்தல் ஒட்டி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது துவங்கியிருக்கின்றன.

அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளை துவக்கி இருக்கின்றனர். அதன்படி தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து இந்த மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Also read... வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கான தேர்வு - நிபுணர் குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி



பெரும்பாலும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடக்கூடிய நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதனை அடுத்து தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது,
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading