• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை.. மனநல மருத்துவர் அளித்த சான்று

குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை.. மனநல மருத்துவர் அளித்த சான்று

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்

பிஞ்சுக்குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை என மருத்துவர் சான்று அளித்துள்ளார்.

  • Share this:
    குழந்தையை தாக்கியதற்காக வருந்துவதாக மனநல மருத்துவரிடம் துளசி கூறியுள்ளார். 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா கராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி(22) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கோகுல்(4) மற்றும்  பிரதீப்(2) இரண்டு மகன்கள் உள்ளனர்.இவருடைய மனைவி துளசி. சமீபகாலமாக தனது கணவன் மீதுள்ள வெறுப்பு காரணமாக தனது இரண்டு வயது குழந்தை பிரதீப்பை வீட்டில் தனியாக இருக்கும்போது கடுமையாக தாக்கியதோடு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    Also Read: யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்? வீடியோ வெளியிட்டவரை கைது செய்யுங்க- சீமான்

    இந்த கொடூரத்தை அறிந்த கணவர் வடிவழகன் துளசியுடன் சண்டைபோட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி துளசியை, கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திராவில் உள்ள தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார் வடிவழகன். துளசியின் செல்போன் கணவரிடம் இருந்த நிலையில் உறவினர்கள் சிலர் செல்போனை ஆராய்ந்து பார்த்த பொழுது துளசி தனது குழந்தையை கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தும் மனதை பதைபதைக்கும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை அறிந்தனர்.

    Also Read:  நாகமாணிக்க கல் சதுரங்க வேட்டை பாணியில் ஒரு சம்பவம் - நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கும் போலீஸ்

    பின்னர், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துளசிமீது சத்தியமங்கலம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி பகுதியில் உள்ள அருணப்பள்ளி என்கிற கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் துளசி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் உடனடியாக குழந்தையின் தாய் துளசியை கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட துளசியிடம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரேம்குமார் என்ற நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    துளசி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் பாரதி , துளசியை பரிசோதனை செய்து அவரிடம் சில கேள்விகளை கேட்டார். மருத்துவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளித்தார்.இதைத்தொடர்ந்து துளசியின் மன நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர் பாரதி சான்று வழங்கி உள்ளார்.

    குழந்தையை தாக்கியது தொடர்பாக வருந்துகிறீர்களா என்று மருத்துவர் கேட்டதற்கு வருந்துவதாக துளசி தெரிவித்தார். துளசி நல்ல மனநிலையில் இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் அளித்ததை தொடர்ந்து துளசியை செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி    ( விழுப்புரம்) 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: