7 மாதமாக ICU-வில் கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் பெண்.. அரசு உதவ கோரிக்கை
7 மாதமாக ICU-வில் கணவர்... குழந்தைகளுடன் தவிக்கும் பெண்.. அரசு உதவ கோரிக்கை
வாசுதேவன், மகேஸ்வரி
Cuddalore District: பன்ருட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 7 மாதங்களாக சிகிச்சையில் இருந்து வரும் தனது கணவரை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தசை அழற்சி நோயால் அவதிப்படும் கணவரை கவனித்துக் கொள்வதற்காக கடந்த 7 மாதங்களாக மருத்துவமனையிலேயே இருக்கும் பெண், தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் வாசுதேவன். கோயில் ஸ்பதியான இவருக்கு கடந்த ஜூன் மாதம் திடீரென கை-கால் செயலிழந்து விழுந்தவர் எழவில்லை. பல மருத்துவரை பார்த்து செலவழித்து விட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கணவரை சேர்த்த மகேஸ்வரி கடந்த 7 மாதங்களாக ICU பிரிவிலேயே தங்கி கணவரை கவனித்து வருகிறார்.
ஜிப்மரில் நடத்தப்பட்ட ஆய்வில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய இரண்டு சிறு குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதங்களாக மருத்துவமனையில் கிடப்பதால் பிள்ளைகளை கவனிக்க ஆளில்லை என கூறும் மகேஸ்வரி, தனது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னிடமிருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டதாகவும் பிள்ளைகள் படிப்பு செலவிற்கும் உணவு செலவுக்கும் கூட பணம் இல்லை என்று கூறுகிறார். தனது கணவருக்கு ஜிப்மரில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவருக்கு மேல் சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கணவரை காப்பாற்ற அனைத்து நகை மற்றும் பணத்தை செலவிட்டும் கணவர் உடல்நலம் பெறவில்லை. இதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.