நாடாளுமன்றத்தில் CAA-க்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? அமைச்சர்களிடம் பெண் சரமாரி கேள்வி

நாடாளுமன்றத்தில் CAA-க்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? அமைச்சர்களிடம் பெண் சரமாரி கேள்வி
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் செல்லூர் ராஜூ.
  • News18
  • Last Updated: March 16, 2020, 10:05 AM IST
  • Share this:
விருதுநகரில் அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர்களிடம், நாடாளுமன்றத்தில் CAA-க்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது ஏன் என்று பெண் கேள்வியெழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

விருதுநகரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, நிலோபர் பாத்திமா என்ற பெண்மணி 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவியை பெற்றதும், நாடாளுமன்றத்தில் CAA-க்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது ஏன் என்று அமைச்சர்களிடம் கேள்வியெழுப்பினார்.


மேலும், இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்றும் சரமாரியாக வினவினார்.

இதையடுத்து, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.,யால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்று அமைச்சர்கள் சமாதானப்படுத்தி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் திமுக முன்னாள் கவுன்சிலர் சுபேதாவின் மகள் என்பது தெரியவந்துள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



Also see...
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading