• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

இன்று பதவியேற்க முடியாத உள்ளாட்சி பிரதிநிதிகள், 22ஆம் தேதி, மறைமுக தேர்தலுக்கு முன்பாக பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்.

  • Share this:
    ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27 ஆயிரத்து 792 உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்கின்றனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்கின்றனர்.

    தமிழகத்தில் காஞ்சிபுரம், நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன், 28 விடுபட்ட இடங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி தொடங்கி மறுநாள் மாலை வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், 27 ஆயிரத்து 792 உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர். இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்கின்றனர். அத்துடன், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.

    இதையடுத்து, 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகின்ற 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று பதவியேற்கும் 27 ஆயிரத்துக்கும மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 22ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் வாக்களிப்பர்.

    Must Read : தெலுங்கு தேசம் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்- ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு

    மேலும், இன்று பதவியேற்க முடியாத உள்ளாட்சி பிரதிநிதிகள், 22ம் தேதி மறைமுக தேர்தலுக்கு முன்பாக பதவியேற்றுக் கொள்ளவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பதவியேற்காவிட்டால், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர்களை தேர்தெடுக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: