தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்து கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பத்திரமாக வனப்பகுதிக்ளுள் விட்டனர்.
கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிக்கு வந்தன. அங்கே வறட்சி நிலவுவதால், யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
வறட்சியால், யானைகள் உணவு, தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளில் ஒரு ஆண் யானை, கடந்த 2 வார காலமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியூர், ஒட்டனூர், நாகமரை, உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.
அங்கிருக்கும் பயிர்களை நாசம் செய்ததுடன் மாடுகளையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இதுபோல தொடர்ந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. அத்துடன், அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை முட்டி சாய்த்து விடக்கூடாது என்பதற்காக, மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 5 ஆம் தேதி காட்டுப் பகுதிக்குள் அந்த யானையை விரட்டியடித்தனர். ஆனால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் அந்த யானை புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால், மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டனர்.
இந்நிலையில், வனத்துறையினர் நேற்று நெருப்பூர் கிராமம் பதனவாடி பகுதியில் சுற்றித்திரிந்த யானையை பிடிக்க முடிவு திட்டமிட்டனர். அதன்படி, முத்தையன் கோவில் தடுப்பணை வனப்பகுதியில் யானையை விரட்டி சென்ற வனத்துறையினர், அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதனால் மயக்க நிலையில் இருந்த யானையை, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கயிறு கட்டி கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
Must Read : 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
பின்னர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதனால், ஒற்றை காட்டு யானையால் பாதிப்புக்கு உள்ளான கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Elephant