கோவை: கணவன் மனைவி குடிபோதையில் சண்டை - மனைவி உயிரிழந்ததுக் கூட தெரியாமல் உறங்கிய கணவன்

கோவை: கணவன் மனைவி குடிபோதையில் சண்டை - மனைவி உயிரிழந்ததுக் கூட தெரியாமல் உறங்கிய கணவன்

ஆறுமுகம், பத்மாவதி,

போதையில் இருந்த கணவன் மனைவிக்கிடையே நேற்று இரவு  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.இதில் காமடைந்த பத்மாவதி உயிரிழந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை மாவட்டம் சூலூரில் குடிபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அடிதடி  தகராறில் மனைவி உயிரிழந்தார். இது தொடர்பாக கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பத்மாவதி.  இவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் பத்மாவதி, ஆறுமுகம் ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவருக்கும் குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்ற பணத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

போதையில் இருந்த கணவன் மனைவிக்கிடையே நேற்று இரவு  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் காமடைந்த பத்மாவதி உயிரிழந்துள்ளார். பத்மாவதி உயிரிழந்தது தெரியாமல் ஆறுமுகமும் அப்படியே தூங்கியுள்ளார்.

Also read... மங்காத்தா பட பாணியில் லாரியுடன் 14,000 மொபைல் போன்களைத் திருடிய வழக்கு- ம.பியைச் சேர்ந்த 6 பேர் கைதுகாலையில் மகள் வந்து பார்த்த போது தாய் இறந்து கிடப்பதும், அருகில் தந்தை குடிபோதையில்  இருப்பதும் பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில்  இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர் , பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக காவல் நிலையம் அனுப்பி வைத்தனர்.பின்னர் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
Published by:Vinothini Aandisamy
First published: