3 நாட்களில் 3 அடி மட்டுமே உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது.

news18
Updated: July 27, 2019, 8:44 AM IST
3 நாட்களில் 3 அடி மட்டுமே உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
மேட்டூர் அணை
news18
Updated: July 27, 2019, 8:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து குறைவான அளவிலேயே தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய, அம்மாநிலம் 21-ம் தேதி முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து வருகிறது.

இந்த தண்ணீர் கடந்த 23 -ம் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. 23-ம் தேதி முதல் தற்போது வரை ஒரே சீராக வினாடிக்கு 7,000 கன அடி மட்டுமே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவே இல்லை.


இதன் காரணமாக 3 நாட்களில் 3 அடி, அதாவது ஒரு நாளைக்கு அரை டிஎம்சி வீதம் 3 நாட்களுக்கு ஒன்று புள்ளி 57 டிஎம்சி மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாகவும், நீர்மட்டம் 42.14 அடியாகவும், நீர் இருப்பு 13.21 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் 60 டிஎம்சி நீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்காக திறக்க முடியும். ஆனால் அணையில் தற்போது வெறும் 13.21 டிஎம்சி மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழகத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு நீர் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Loading...

அதேநேரம் 124 அடி கொண்ட கேஆர்எஸ் அணை 91 அடி நிரம்பியுள்ளது. 65 அடி உயரம் கொண்ட கபினி அணை 55 அடி நிரம்பியுள்ளது. போதிய தண்ணீர் இருந்தும், மழை பெய்யும் வாய்ப்பு இருந்தும்கூட கர்நாடகா, நீரின் அளவை அதிகரிக்கவில்லை. 2 அணைகளிலும் இருந்து வினாடிக்கு வெறும் 13,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய ஜூன் மற்றும் ஜூலை மாத பங்கு 40 புள்ளி நான்கு 3 டிஎம்சி ஆகும். இதனை தாமதமின்றி திறந்துவிட வேண்டுமென டெல்லியில் நேற்று கூடிய காவிரி ஒழுங்காற்று குழு கூறியுள்ளது. இதனை ஏற்று கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டுமென டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...