Home /News /tamil-nadu /

தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் காலநிலை குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் விதமாக உள்ளது என சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உதகை அரசு தாவரவியல் பூங்காவில்  விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
    கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டு சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

    மழை இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் அமைதியான மற்றும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    இதை குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில் 10 நாட்களாக நீலகிரியில் பெய்த கனமழையால் சுற்றுலா தளங்களுக்கு வர முடியாமல் இருந்தது தற்போது மழை குறைந்து வெயில் காணப்படுவதால் சுற்றுலா தளங்களை காண வந்ததாகவும் குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் காலநிலை குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்தனர்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Ooty, Tourist spots

    அடுத்த செய்தி