‘எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல’ - உறுதி எடுத்த கிராம மக்கள்

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல

சிவகங்கை மாவட்டம், பெரியக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தெக்கூரில் ‘எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என்று அறிவிப்புப் பலகை கிராம நுழைவு வாயில் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை அருகே கிராம எல்லைகளில்  ‘எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என மக்கள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். கிராம மகளிர் குழுவினரும் இளைஞர்களும் இணைந்து கிராமத்தில் கூட்டம் போட்டு வாக்குகளை பணத்திற்கு விற்க மாட்டோம் என்று உறுதி எடுத்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. வாக்குகளை விற்காதீர்கள் எனத் தேர்தல் அதிகாரிகள் பிரச்சாரம் செய்தாலும்,  பணத்திற்காக சில வாக்காளர்கள், வாக்குகளை அளிக்கின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், பெரியக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தெக்கூரில் ‘எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என்று அறிவிப்புப் பலகை கிராம நுழைவு வாயில் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் மன்றத்தினரும் இணைந்து எடுத்த முடிவை கிராம மக்கள், அரசு அதிகாரிகள்.  தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  கிராம மக்களை பாராட்டினர்.

தெக்கூர் கிராமத்தில் சுமார் 200 வீடுகளும் 650 வாக்காளர்களும் உள்ளனர். அவர்களிடம் வாக்குகளை விற்க வேண்டாம். என வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  அரசியல் கட்சியினர் பணத்தோடு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஊர் எல்லை யிலேயே அறிவிப்புப் பலகை வைத்துள்ளதாகவும், காசு வாங்கி விட்டால்  பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போய்விடும் என்றும் கூறுகின்றனர்.

Must Read :  உழவு மாடு கிடைக்காததால், 14 வயது மகனை வைத்து உழவு பணி செய்த ஏழை விவசாயி...

 

வாக்குகளை விற்காமல் ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் தெக்கூர் மக்களை போல் மற்றவர்களும் கடைபிடித்தால் பணநாயகத்தை வெல்லலாம் என்பது நிதர்சனம்.
Published by:Suresh V
First published: