கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

கோப்பு படம்

கால்நடை மருத்துவ படிப்புக மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தரவரிசையில் முன்னிலை இடங்களை கிராமப்புற மாணவர்களே  பிடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு பொது மருத்துவ கலந்தாய்விற்கு பிறகே  நடத்தப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புக மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தரவரிசையில் முன்னிலை இடங்களை கிராமப்புற மாணவர்களே  பிடித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை மருத்துவப் படிப்பு BVSC மற்றும் கால்நடை தொழில் நுட்ப படிப்பு B.tech படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியலை அவர் இன்று வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு தமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த ஆண்டு கூடுதலாக 120 இடங்கள்  ஏற்படுத்தப்பட்டு கால்நடை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளில் 580 இடங்கள் உள்ளதாக கூறினார்.

இந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 15 ,580 விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டு அவற்றில் 13,901 விண்ணப்பங்கள் தகுதி பெற்றதாக கூறிய அவர் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Also read... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி Covaxin 3-ஆம் கட்ட சோதனையில் நுழைந்தது..Bvsc தரவரிசைப்பட்டியலில் முன்னிலை பெற்றவர்கள்
தரவரிசையில் முதல் இடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுமாயா எஸ் நாயர் என்கிற மாணவி 199.25 டாப் மதிப்பெண்களுடன் முதலிடமும்
சேலத்தைச் சேர்ந்த மாணவர் சுந்தர்.ஜே என்கிற மாணவர் 198.50 கட்-ஆஃப் மதிப்பெண் களுடன் இரண்டாம் இடமும்
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி கோகிலா 197.51 கட்டப் மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்..
B.tech. படிப்பில் முதல் 3 இடங்களைப் மாணவிகளே  பிடித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவாகணி என்கிற மாணவி 192 மதிப்பெண்களுடன் முதலிடமும் நாமக்கல்லை சேர்ந்த ரித்தி என்கிற மாணவி 192 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா என்கிற மாணவி 191.50 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: