Home /News /tamil-nadu /

If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும்: திமுக எம்எல்ஏ முத்துராஜா பேச்சு

If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும்: திமுக எம்எல்ஏ முத்துராஜா பேச்சு

If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும்

If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும்

பொதுவாக எல்லாருக்கும் இதயம் ல்ப்டப் லப்டப் என்று தான் துடிக்கும், ஆனால் விமர்சனங்களை வைக்கும் மனிதநேய இல்லாதவர்களுக்கு இதயம் டப் டப் என்று துடிக்கும் என்று அவர் பேசினார்.

    If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும் என திமுக சட்டபேரவை உறுப்பினர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.

    மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டபேரவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கடந்த அதிமுக ஆட்சியில் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடு குறித்து பேசினார்.

    அவர் பேசியதாவது, மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் காணப்பட்டதாகவும் தற்போதைய திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதாகத் தெரிவித்தார் .

    தொடர்ந்து பேசிய அவர், If You are Bad I am Your Dad என்ற வசனம் எங்கள் தலைவருக்கு நன்கு பொருந்தும் வகையில் சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறார்.

    பொதுவாக எல்லாருக்கும் இதயம் ல்ப்டப் லப்டப் என்று தான் துடிக்கும், ஆனால் விமர்சனங்களை வைக்கும் மனிதநேயம் இல்லாதவர்களுக்கு இதயம் டப் டப் என்று துடிக்கும் என பேசினார்.

    நிமிர்ந்த மைக் - வளைந்த மைக்? ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.நா.எழிலன்

    தொடர்ந்து, பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் 110-விதியின் கீழ் நிறைவேற்றிய அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடபடும் என அறிவித்திருந்த நிலையில் நன்றி தெரிவித்தார்.

    இறுதியாக 110-விதியில் முதலமைச்சர் எழுந்து பேசும் போது இந்த அவையில் மைக் நிமிர்த்தி பேசுவார்.

    அவர் பேசும் போது கம்பீரமாக இருக்கும் அவர் தான் மு.க.ஸ்டாலின், வளைந்த மைக் யார் என்று உங்களுக்கே தெரியும்? என பேசி முடித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி