லாலுவுக்கு எதிரான கால்நடை தீவன வழக்கில் இன்று தீர்ப்பு!

கால்நடை தீவன ஊழல் தொடர்பான மற்றோர் வழக்கில் ஜார்க்கண்ட் கோர்ட்டு இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இதன் தீர்ப்பை லாலு மட்டுமின்றி அவரை கேலி பேசும் மாற்றுக்கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

news18
Updated: January 11, 2019, 9:23 AM IST
லாலுவுக்கு எதிரான கால்நடை தீவன வழக்கில் இன்று தீர்ப்பு!
லாலு பிரசாத் யாதவ்
news18
Updated: January 11, 2019, 9:23 AM IST
ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை அரசியல் கட்சியினர் போட்டி போட்டு சந்தித்து வருவதை எதிராளிகள் கேலி பேசிவருகின்றனர். இந்த சூழலில் கால்நடை தீவன வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவது லாலுவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு தற்போது மருத்துவமனையில் சுதந்திரக் காற்றை தற்காலிகமாக சுவாசித்துவருகிறார். எனினும், லாலுவை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பது நின்றபாடில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்ஜன் சக்தி கட்சி எம்.பி.யும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான், ஊழல் கறை படிந்த ஒருவரை மகாத்பந்தன் கூட்டணி தலைவர்கள் போட்டி போட்டு சந்திப்பது வேதனை என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதுபோல், நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் எம்.பி.யோ, எம்.பி. சீட்டுக்காக கையேந்தும் சிலர் கைதி எண் 3 ஆயிரத்து 351-ஐ ஜெயிலில் சந்தித்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்றாடுவதாக நக்கல் அடித்துள்ளார்.

இந்த கேலி, கிண்டல்களுக்கு மத்தியில் கால்நடை தீவன ஊழல் தொடர்பான மற்றோர் வழக்கில் ஜார்க்கண்ட் கோர்ட்டு இன்று  தீர்ப்பளிக்கவுள்ளது. இதன் தீர்ப்பை லாலு மட்டுமின்றி அவரை கேலி பேசும் மாற்றுக்கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் தீர்ப்பு எதிராக வந்தால் லாலுவுக்கு சறுக்கலாகவே பார்க்கப்படும்.

Also see...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...