கொத்தவால்சாவடி காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்...

கொரோனா பரவலை தடுக்க சென்னை கொத்தவால்சாவடியில் இருந்த காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கொத்தவால்சாவடி காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்...
பாரிமுனை பேருந்து நிலையம்
  • Share this:
கொரோனா பரவலை தடுக்க சென்னை கொத்தவால்சாவடியில் இருந்த காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 89 காய்கறி சந்தைகளை மாநகராட்சி மண்டல அதிகாரி தலைமையிலான குழுக்கள் தனிதனியாக கண்காணித்து வருகிறது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொத்தவால்சாவடி காய்கறி சந்தையில் கூடியதால் சந்தை தற்காலிகமாக மூடபட்டது.

இந்நிலையில் கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 6மணி முதல் 11 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சந்தை வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் முககவசம் அணியவில்லை என்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also read... கொரோனா பரவலால் வேலையிழப்பு... போலியோ பாதிப்புடைய மகளுக்காக கலங்கும் கோவை சமையல் கலைஞர்..

அதேபோல பொது மக்களின் வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்துவருபவர்கள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.சந்தையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading