மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்
விசிக தலைவர் - திருமாவளவன்
  • Share this:
கல்வி மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, சிறப்புக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, அதற்கென சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு வருகின்ற 8-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Also read... Chennai Power Cut: சென்னையில் இன்று (06-06-2020) மின்தடை எங்கெங்கே..?

Also see...
First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading