7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா..

7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா..

வண்டலூர் பூங்கா

வருவாய் மீட்பு நடவடிக்கையாக பூங்கா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் 90 ரூபாயாகவும், சிறுவர்களுக்கான கட்டணம் 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா, 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  இதன் ஒருபகுதியாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே பொதுமக்கள் உயிரியல் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also read... ’பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’ - முதலமைச்சர் பழனிசாமி..  சமூக இடைவெளியை பின்பற்றியே பறவைகள் மற்றும் விலங்குகளை பார்க்க வேண்டும் எனவும், மீன்கள், பட்டாம்பூச்சிகளை காண தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

  பொதுமக்கள் கைகளில் கிருமி நாசினி தெளிக்க, 3 இடங்களில் தானியங்கி சானிடைசர் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வருவாய் மீட்பு நடவடிக்கையாக பூங்கா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் 90 ரூபாயாகவும், சிறுவர்களுக்கான கட்டணம் 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: